போலீசாரை தகாத வார்த்தையால் திட்டிய உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியர் கைது
நவிமும்பையில் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டிய உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
நவிமும்பையில் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டிய உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஊழியர்
மும்பையில் கடந்த சில நாட்களாக பெண் ஒருவர் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தையால் திட்டும் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் போலீசாரை அவதூறாக பேசிய பெண் ஆன்-லைன் மூலம் வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் சொமட்டோ நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பெண் ஊழியர் பிரியங்கா மோரே(வயது27) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 8-ந்தேதி நவிமும்பை வாஷி செக்டார்-8 பகுதியில் நோ-பார்க்கிங்கில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து உள்ளார்.
பெண் கைது
அப்போது அந்த வழியாக சென்ற போக்குவரத்து போலீசார் அவருக்கு இ-செல்லான் முறை மூலம் அபராதம் விதிக்க அந்த இருசக்கர வாகனத்தை செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த பெண், போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மேலும் போலீசாரின் செல்போனையும் பறிக்க முயன்றது தெரியவந்தது.
போலீசார் அந்த பெண் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொள்ளை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். வீடியோ பரபரப்பானதை தொடர்ந்து தற்போது அந்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.