மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-08-20 21:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகன் திம்மராயன் (வயது 27). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் கோபித்து சென்று விட்டார். இதைத் தொடர்ந்து தற்போது திம்மராயன் மனைவி, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட திம்மராயன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் ஜொனபண்டாவை சேர்ந்தவர் பிரபாகரன் (29). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரபாகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் பர்கூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (42). கிரானைட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மனமுடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்