ராசிபுரம் நகராட்சியில் ரூ.57 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா-பூமிபூஜை: அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு
ராசிபுரம் நகராட்சியில் ரூ.57 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவும், பூமிபூஜை நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.57 லட்சத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் திறப்புவிழா மற்றும் ரேஷன்கடைகளுக்கு பூமிபூஜை விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு, வேலா பூங்கா, செம்மலை தெருவில் தலா ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிகளில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார்பதி, ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பாலமுருகன், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர்.வி.மகாலிங்கம், ராசிபுரம் நகரவங்கி தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், ராசிபுரம் தாலுகா வேளாண்மை உற்பத்தி மற்றும் விற்பனைச்சங்க தலைவர் இ.கே.பொன்னுசாமி, ராசிபுரம் அட்மா தலைவர் காளியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே ரூ.8.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டவும், எல்லப்பா தெரு, காந்தி சாலை, வீட்டுவசதி வாரியம் ஆகிய 3 இடங்களில் முறையே ரூ.10.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.31.50 லட்சத்தில் 3 ரேஷன்கடைகள் கட்டவும் பூமிபூஜையை அமைச்சர்கள் நடத்தி வைத்தனர். ராசிபுரம் நகராட்சிக்கு ரூ.50.40 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் 28 குப்பை அள்ளும் வண்டிகளை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிகளில் வெண்ணந்தூர் அட்மாகுழு தலைவர் வக்கீல் தாமோதரன், புதுப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் எல்.எஸ்.மணி, ராசிபுரம் வீட்டுவசதி சங்கத்தலைவர் கோபால், ராசிபுரம் நகரவங்கி துணைத்தலைவர் வெங்கடாசலம், சூப்பர்பட்டு சொசைட்டி தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் கந்தசாமி, மோகனூர் சர்க்கரை ஆலை தலைவர் வக்கீல் சுரேஷ்குமார், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சரோஜா தலைமையில் நடந்தது. அப்போது ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டப்பணிகள், குடிநீர் வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றி அரசு துறை அலுவலர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மாலா, மாவட்ட ஊராட்சி செயலாளர் கருணாநிதி மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.