ஜெல்லி மிட்டாய் தின்றதில் உயிரிழந்த சிறுவனின் உடல் பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

ஜெல்லி மிட்டாய் தின்றதில் உயிரிழந்த சிறுவனின் உடல் பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு.

Update: 2019-08-19 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர்-ஆலம்பாடி பிரிவு ரோடு அன்னை நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் ரங்கநாதன் (வயது 4). கடந்த 17-ந் தேதி ஜெல்லி மிட்டாய் தின்றதில் உயிரிழந்தான். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெல்லி மிட்டாய் விற்பனை செய்த கடைக்கு சென்று, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜெல்லி மிட்டாயின் தரம், தயாரிப்பு தேதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஜெல்லிமிட்டாய் காலாவதியாக வில்லை என்பது தெரிய வந்தது. பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ரங்கநாதனின் உடலை பார்வையிட்டு மருத்துவர்களிடம் கேட்டபோது, சிறுவன் ஜெல்லி மிட்டாய் தின்றபோது மூச்சுக்குழாய் அடைத்து கொண்டதால் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ரெங்கநாதனின் சில உடல் பாகங்கள் தடயவியல் பரிசோதனைக்காக நேற்று திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவு வந்தபிறகு தான் ரங்கநாதன் எப்படி இறந்தான்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்