மாற்று வழியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
மாற்று வழியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் சோலாப்பூர்- வாடி இடையே நடந்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக சி.எஸ்.எம்.டி.- நாகர்கோவில் ரெயில்கள் கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் அதில் சில ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
19, 20-ந்தேதிகளில் இயக்கப்பட இருந்த நாகர்கோவில்- சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16340), 21, 22-ந்தேதிகளில் இயக்கப்பட இருந்த சி.எஸ்.எம்.டி.- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்(வண்டி எண் 16339), இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட இருந்த நாகர்கோவில்- சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16352), 20-ந்தேதி இயக்கப்பட இருந்த சி.எஸ்.எம்.டி.- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்(வண்டி எண் 16351) ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்படாத மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்கட்டமைப்பு பணிகள் முடியும் வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது போல கொங்கன் வழித்தடத்தில் பொள்ளாச்சி, பாலக்காடு, சொர்ணாவூர், தோகுர், ரோகா, பன்வெல் வழியாக இயக்கப்படும்.