பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடமான மாட்டுங்கா- முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9.53 மணி முதல் மதியம் 2.42 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் மாட்டுங்கா- முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்த ரெயில்கள் மாட்டுங்கா- முல்லுண்டு இடையே உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். மாட்டுங்கா-முல்லுண்டு ரெயில் நிலையங்களுக்கு பிறகு விரைவு வழித்தடத்தில் இயக் கப் படும். இதனால் ரெயில்கள் 20 நிமிடங்கள் காலதாமதமாக இயங்கும்.
துறைமுக வழித்தடத்தில் குர்லா-வாஷி இடையே காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.08 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டிக்கும் ரெயில்கள் இயக்கப்படாது.
இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி. - குர்லா, வாஷி- பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
மேற்கு ரெயில்வேயில் சர்ச்கேட்- மும்பை சென்ட்ரல் இடையே காலை 10.35 மணி முதல் மாலை 3.35 மணி வரை விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் விரைவு ரெயில்கள் அனைத்தும் சர்ச்கேட்- மும்பை சென்ட்ரல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.