விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அய்யாக்கண்ணு வலியுறுத்தி உள்ளார்.
கும்பகோணம்,
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கண்டுகொள்வதில்லை
புயலின்போதும், வெள்ளத்தின்போதும் பாதிக்கப்படும் விவசாயிகளை அரசு கண்டுகொள்வதில்லை. தற்போது காவிரியில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. ஆனால் அதிக அளவு தண்ணீர் வருவதுபோல் மாயை ஏற்படுத்தி உள்ளனர். தண்ணீர் வருகின்ற இந்த நேரத்தில் விதை நெல் வாங்க கூட விவசாயிகளிடம் பணம் இல்லை.
வேளாண் பொருட்களுக்கு நல்ல விலையை அரசு நிர்ணயித்து, அதற்கு தேவையானவற்றை செய்தால் விவசாயத்தை யாரும் கைவிட மாட்டார்கள். ஆனால் மத்திய அரசு விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்க திட்டம் போடுகிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகளால் தமிழனை அழிக்க முயற்சி நடக்கிறது.
மோசடி
கரும்பு உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு ரூ.420 கோடியை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டி உள்ளது. சர்க்கரை ஆலை நிர்வாகிகள் கரும்பு விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். சிறு, குறு என்று பார்க்காமல் விவசாயி எவராக இருந்தாலும் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் வருகிற உள்ளாட்சி தேர்தல், அடுத்து நடக்கின்ற சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வி அடையும்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், வேளாண் பொருட்களுக்கு லாபகரமான விலை தரக்கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும், 8 வழிச்சாலை திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை கைவிடக்கோரியும் சென்னையில் கடலில் இறங்கி சாகும் வரை போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.