தாளவாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் கட்டுக்கட்டாக ரூ.3 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்; ஒருவர் கைது
தாளவாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் கட்டுக்கட்டாக ரூ.3 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்ததோடு, 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தாளவாடி,
தமிழக- கர்நாடக எல்லையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அமைந்து உள்ள கிராமம் அட்டுகுழிபுரம். இந்த கிராமத்தில் கர்நாடக மாநிலம் ராமசமுத்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து 2 பேர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோவை சோதனையிட்டனர். அப்போது அந்த ஆட்டோவில் 3 அட்டை பெட்டிகள் இருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தனர். அப்போது 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 2 ஆயிரம் ரூபாய் கட்டுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அது கள்ள நோட்டுகள் என தெரிய வந்தது. மேலும் அதில் 3 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது. உடனே பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர், கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 35)’ என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கார்த்தியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 3 கோடி ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த நான் கடந்த வாரம்தான் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து ஆட்டோ ஓட்டி வந்தேன். இன்று (அதாவது நேற்று) பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு ஆட்டோவில் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்று ஆட்டோவின் உரிமையாளர் என்னிடம் கூறினார். அதன்பேரில் பொருட்களை ஏற்றிக்கொண்டு தமிழக பகுதிக்கு வந்தேன். அப்போது என்னுடன் 2 பேர் வந்தனர்.
இதில் தாளவாடி அருகே உள்ள அட்டுகுழிபுரம் பகுதியில் சென்றபோது, போலீசார் நிற்பதை கண்டதும் ஆட்டோவை நிறுத்தினேன். அப்போது என்னுடன் வந்த 2 பேர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிவிட்டனர். மேலும் போலீசார் ஆட்டோவை சோதனை செய்தபோது ஆட்டோவில் ரூ.2 ஆயிரம் நோட்டு கட்டுகள் இருந்ததும், அது கள்ள நோட்டுகள் என்பதும், அந்த கள்ள நோட்டுகள் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் எனக்கு தெரிய வந்தது.
இவ்வாறு கார்த்தி கூறினார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த கள்ளநோட்டுகள் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் புழக்கத்துக்கு விடுவதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசாரால் 3 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.