வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் மானியம் - கலெக்டர் கதிரவன் தகவல்
வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் திருப்பூர் கோட்டம் சார்பில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நகர்புறங்களில் வசித்து வரும் பொருளாதாரத்தில் நலிவற்ற ஏழை மக்கள் வீடு கட்டிக்கொள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தகுதி உள்ள பயனாளிகள் தாங்கள் வசித்து வரும் இடத்தில் சுமார் 300 சதுர அடி பரப்பளவில் தாங்களாகவே கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள வேண்டும். இதற்கு அரசின் மொத்த மானியம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பயனாளியின் வங்கி கணக்கில் 4 தவணைகளில் நேரடியாக செலுத்தப்படும்.
பயனாளிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட சொந்த இடத்தில் குடிசை வீடு, ஓட்டு வீடு அல்லது காலி மனை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் பட்டா அல்லது பத்திரம் வைத்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளியின் பெயரிலோ அல்லது பயனாளியின் குடும்பத்தினரின் பெயரிலோ வேறு வீடு எதுவும் இந்தியாவின் எந்த பகுதியிலும் இருக்க கூடாது. எனவே தகுதி வாய்ந்த நபர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பட்டா அல்லது பத்திரம் ஆகியவற்றின் நகல்களுடன் சித்தோடு கவுந்தப்பாடி ரோடு பிரகாஷ் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் உள்ள உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.