செங்கல்பட்டு அருகே சிறுவன் வெட்டிக்கொலை 3 பேரிடம் போலீசார் விசாரணை
செங்கல்பட்டு அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்துள்ள குருவன்மேடு பகுதியை சேர்ந்தவர் அருள்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகன் சூர்யா (வயது 16) 9-ம் வகுப்பு வரை படித்த அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த ஒரு ஆண்டாக பொக்லைன் எந்திர டிரைவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற நிலையில் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர் கள் பாலாற்றங்கரையில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது குருவன்மேடு பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.