வாடிப்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற இளம்பெண் சாவு
வாடிப்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற இளம்பெண் திடீரென இறந்தார்.
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி மேட்டுபெருமாள் நகரைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகள் அகல்யா (வயது 25). இவருக்கும், தாதப்பநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் பாலமுருகன் (28) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அகல்யாவுக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே அவரை வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு செவிலியர் ஒருவர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அகல்யாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனே உறவினர்கள் தாயையும், குழந்தையையும் வந்து பார்த்தனர். குழந்தைக்கு அகல்யா தாய்ப்பால் ஊட்டினார். அதன் பின்னர் நள்ளிரவில் திடீர் என்று அகல்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்து 108 ஆம்புலன்சு மூலம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அகல்யாவை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அகல்யா பரிதாபமாக இறந்தார்.
இதனைத் தொடர்ந்து அதிகாலையில் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாயை இழந்த பச்சிளம் குழந்தையை பார்த்து குடும்பத்தார் அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.