காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி 32 பேர் கைது
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்ததை ரத்து செய்ததை கண்டித்து கூத்தாநல்லூர் அருகே தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூர்,
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி தபால் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிஜெகபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுயிருந்த கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சீனிஜெகபர் சாதிக் உள்பட 32 பேரை கைது செய்தனர்.