திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 25) என்பவர், நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை செல்வதற்காக புதிய பஸ் நிலையம் அருகே தனது நண்பர்களான சூரியகுமார் மற்றும் செல்வகுமார் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். அவர்களிடம் பேசியபடியே அருகில் வந்த அந்த வாலிபர்கள், கார்த்திக்கிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்றனர்.
ஆனால் சுதாரித்து கொண்ட கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்கள் அந்த வாலிபர்களை துரத்தி சென்று பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அந்த வாலிபர்கள் திருப்பூர் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த பரத் குமார்(19) மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தனபால்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு செல்போனையும் பறிமுதல் செய்ததுடன், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.