கனமழை ஓய்ந்தாலும் வெள்ளம் வடியவில்லை சாங்கிலி, கோலாப்பூரில் மீட்பு பணி தீவிரம்

சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் கனமழை ஓய்ந்தாலும், வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-08-10 23:45 GMT
புனே,

மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மராட்டியத்தில் உள்ள கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் கோலாப்பூர், சாங்கிலியில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது.

கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் பொங்கிய வெள்ளம் கரையோர பகுதிகளை மூழ்கடித்தது. குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் பரிதவித்து வருகிறார்கள். மேற்கண்ட 5 மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 4 லட்சம் பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். சாங்கிலி மாவட்டத்தில் மீட்பு படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 5 மாவட்டங்களிலும் மழைக்கு 29 பேர் பலியாகி உள்ளனர்.

வெள்ளம் வடியவில்லை

இந்த நிலையில் தொடர்ந்து மக்களை மிரட்டி வந்த கனமழை கடந்த 2 நாட்களாக சற்று ஓய்ந்துள்ளது. இதன் காரணமாக கோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. ஆனால் வெள்ளம் முழுமையாக வடிய இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம் என தெரிகிறது.

தற்போது மழை வெள் ளத்தில் சிக்கி உள்ளவர் களை மீட்கும் பணியும், அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு படையினருடன் கடற்படை குழுவினரும், ராணுவத்தினரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஹெலிகாப்டர், படகுகள் மூலம் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்