நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தில் மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியை பெருக் கும் வகையில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரம் எக்டர் மானாவாரி நிலங்களில் ஊருணிகள் ஆழப்படுத்துதல், புதிய ஊருணிகள் உருவாக்குதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் ஆகிய மழைநீர் சேகரிப்பு பணிகளும், கோடை உழவு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்குதல், விவசாய குழுக்களுக்கு வேளாண் கருவிகள் மற்றும் வாடகை மையங்கள் அமைக்க 80 சதவீத மானியம் வழங்குதல் ஆகிய பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களில் பயன் பெற விரும்புபவர்கள் உரிய விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளருக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.