குடியாத்தம் பகுதியில், பல்வேறு இடங்களில் திருடிய பழைய குற்றவாளி கைது - 45 பவுன் நகை பறிமுதல்
குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம்,
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவரது வீட்டில் 22 பவுன் நகையும், சர்வேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி என்வரது வீட்டில் 3½ பவுன் நகையும், கோவிந்தாபுரம் பகுதியில் ரோஜா என்பவரது வீட்டில் 5¾ பவுன் நகையும், தரணம்பேட்டை தோப்பு தெருவில் தமயந்தி என்பவரது வீட்டில் 20 பவுன் நகையும், ½ கிலோ வெள்ளியும் திருட்டு போனது.
மேலும் பெரும்பாடி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில் 10 பவுன் நகையும், மேல்செட்டிகுப்பம் கிராமத்தில் ஜோதி என்பவரது வீட்டில் 6¾ பவுன் நகையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கமும், பி.வெங்கடாபுரம் பகுதியில் அரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் 2½ பவுன் நகையும் திருட்டு போனது.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து குடியாத்தம் டவுன், தாலுகா மற்றும் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பழைய குற்றவாளிகள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், வரதராஜ், சபாரத்தினம், ஏட்டுகள் கோவிந்தசாமி, சந்திரபாபு, அன்பரசன், அய்யப்பன், ஜலால் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பழைய குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குடியாத்தத்தை அடுத்த காந்திகணவாய் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து, 10 பவுன் நகையை மீட்டனர்.
முக்கிய குற்றவாளியான குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தை சேர்ந்த சுகுமார் (வயது 30) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் குடியாத்தம் பகுதியில் பல இடங்களில் யுவராஜூடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து சுகுமார் அளித்த தகவலின் பேரில் 45 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட சுகுமார் மற்றும் யுவராஜ் குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த பின்னர் மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.