வானவில் : பானாசோனிக் எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி.
டி. வி. தயாரிப்பில் சோனி, சாம்சங், எல்.ஜி. ஆகியவை பிரபலமான அளவிற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றொரு பிராண்ட் பானாசோனிக்.
ஜப்பானைச் சேர்ந்த இந்நிறுவனம் பல ஆண்டுகளாகவே இந்திய வீடுகளில் எலெக்ட்ரானிக் தயாரிப்புகள் மூலம் பிரபலமான பெயராக அறியப்படுகிறது.
இந்நிறுவனம் ஜி.எக்ஸ் 600. 4 கே. ஹெச்.டி.ஆர். எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இது 75 அங்குலம் கொண்டதாகும். இது கூகுள் அசிஸ்ட், அமேசான் அலெக்ஸா ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மை ஹோம் 3.0 இன்டர்பேஸ், டால்பி விஷன் ஹெச்.டி.ஆர் வசதி உடையது.
நெட்பிளிக்ஸ், யூ-டியூப் உள்ளிட்டவற்றின் இணைப்பை பெறும். இதில் ஹெச்.சி.எக்ஸ். பிராசஸர் உள்ளது. 55 அங்குல எப்.இஸட் 950 மாடல் விலை ரூ. 2.99 லட்சமாகும். 65 அங்குல எப்.இஸட் 1000 ஓலெட் டி.வி. விலை ரூ.4.49 லட்சமாகும்.