குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துத் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.

Update: 2019-08-06 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறையின் சார்பில் அரியலூர் வட்டம், பொய்யூர், விளாங்குடி, சித்தமல்லி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்துத் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொய்யூர் கிராமத்தில் கல்லார் ஓடையில் ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அணைக்கட்டு புனரமைக்கும் பணி, கரைகள் பலப்படுத்தும் பணி மற்றும் தூர் வாரும் பணியினையும், விளாங்குடி ஓடையில் ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அணைக்கட்டு புனரமைக்கும் பணி, கரைகள் பலப்படுத்தும் பணி மற்றும் தூர் வாரும் பணியையும், சித்தமல்லி கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் நீர் ஓடையின் உபரி நீர் போக்கி செல்லும் நீர் ஓடையினையும், ஓடையின் இருபுறமும் சீரான இடைவெளியில் எல்லை கற்கள் நடப்பட்டுவரும் பணிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இப்பணிகள் அனைத்தும் மழைக் காலங்களுக்கு முன்னதாக விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.

ஆய்வின் போது செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்