சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புதுவையில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி,
சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த சில நாட்களாகவே இரவு பகலாக ரோந்து, வாகன சோதனை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். புதுவையிலும் இதுபோன்ற சோதனைகள் தொடர்கின்றன. விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அங்கு உயர் அதிகாரிகள் அடிக்கடி சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று போலீசார் சுதந்திர தின ஒத்திகையில் ஈடுபட்டனர். சுதந்திர தினவிழா நடக்கும் உப்பளம் மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மைதானத்துக்கு நடை பயிற்சிக்கு சென்ற யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அங்கு போலீசார் அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கடலோர பாதுகாப்பு போலீசாரும் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக திரிபவர்களையும் பிடித்து விசாரிக்கின்றனர்.