வாணாபுரம் அருகே, அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- 18 பேர் படுகாயம்

வாணாபுரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-08-06 22:45 GMT
வாணாபுரம்,

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 35 பயணிகளுடன் அரசு பஸ் திருக்கோவிலூர் நோக்கி சென்றது. வாணாபுரம் அருகே உள்ள சு.ஆண்டாப்பட்டு அருகில் பஸ் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வெறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்