நர்சிங் படித்தவர்களுக்கு வேலை
டாடா நினைவு மையம் எனும் மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் மருத்துவ அறிவியல் மையம், மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன.
தற்போது இந்த அமைப்பின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்படும் ஹோமி பாபா புற்றுநோய் மையத்தில் துணை மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நர்ஸ் பணிக்கு 83 இடங்கள் உள்பட மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சயின்டிபிக் அசிஸ்டன்ட், போர்மேன், பார்மசிஸ்ட், டெக்னீசியன், அட்மின் ஆபீசர், லோயர் டிவிசன் கிளார்க், சமையல்காரர் போன்ற பணிகளுக்கு கணிசமான காலியிடங்கள் உள்ளன.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. நர்ஸ் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களில் ஐ.டி.ஐ., இளநிலை, முதுநிலை படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு 16-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://tmc.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.