வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது

வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-04 21:45 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள காட்டாத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 33). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை திருட்டு போனது. இதுகுறித்து கலைச்செல்வன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே கிராமத்தில் உள்ள புதுக்காலனி தெருவை சேர்ந்த வேல்முருகனின் மகன் கோபாலகிருஷ்ணன் (19) என்பவர், கலைச்செல்வன் வீட்டில் புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்