கோயம்பேடு அருகே தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் வாலிபரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-04 22:15 GMT
பூந்தமல்லி,

கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் ஏ.வி.கே. நகரில் உள்ள தனியார் அட்டை கம்பெனி அருகில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தவர் திருவேற்காட்டை சேர்ந்த ரஞ்சித் (வயது 23), என்பது தெரிய வந்தது.

இவர் கடந்த ஆண்டு பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் போலீஸ்காரரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும், கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி செய்த வழக்குகளில் கைதானவர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு அந்தப் பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் ரஞ்சித் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, நண்பர்கள் சேர்ந்து அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்