அம்பத்தூரில் சாலையின் நடுவில் உள்ள டிரான்ஸ்பார்மரை அகற்ற கோரிக்கை
அபிராமபுரம் பிரதான சாலையின் நடுவே பயன்பாடு இல்லாத உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது.
பூந்தமல்லி,
பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7-வது மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட அபிராமபுரம் பிரதான சாலையின் நடுவே பயன்பாடு இல்லாத உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஆபத்தான முறையில் டிரான்ஸ்பார்மரின் நடுவே செல்ல வேண்டியது உள்ளது.
காலை, மாலை நேரங்களில் மாணவர்களை ஏற்றிவரும் பள்ளி வாகனங்களும் ஆபத்தான முறையில் இந்த டிரான்ஸ்பார்மரை கடந்துதான் வந்து செல்ல வேண்டியது உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள், சாலையின் நடுவில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
உபயோகம் இல்லாமல் சாலையின் குறுக்கே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை அகற்றும்படி மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியும் தாமதம் செய்யாமல் சாலையின் நடுவில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை அகற்றவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.