தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பயங்கரவாதத்தை எதிர்த்து அமைதிப்பேரணி சென்னையில் நடந்தது
சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பயங்கரவாதத்தை எதிர்த்து முஸ்லிம்கள் அமைதிப்பேரணி நடத்தினர்.
சென்னை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிராக நேற்று சென்னை புதுப்பேட்டையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. எழும்பூர் வரை நடந்த இந்த பேரணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் முஹமது தலைமை தாங்கினார்.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக பொதுச்செயலாளர் முஹமது நிருபர்களிடம் கூறியதாவது:-
மனித குலத்தை அச்சுறுத்தக்கூடிய பல்வேறு விதமான படுகொலைகள் உலகெங்கும் நடைபெறுகிறது. சமீபத்தில் இலங்கையில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும், நியூசிலாந்தில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும் அப்பாவி மக்கள்தான் படுகொலை செய்யப்படுகிறார்கள். இஸ்லாம் மார்க்கம் ஒரு அமைதி மார்க்கம் என்பதை உலக மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும், படுகொலையை செய்யக்கூடிய பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் இந்த பேரணி நடைபெறுகிறது.
இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு கொடூர படுகொலைகள் நடைபெறுகிறது. குறிப்பாக சமீபத்தில் முகமது காலிப் என்ற 15 வயது சிறுவன் நெருப்பிட்டு கொளுத்தப்பட்டான். இதைப்போல பல முஸ்லிம் ஆண்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைக்கு தீர்வு கொண்டு வராமல் மத்திய அரசு முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
முத்தலாக் சட்டம் முஸ்லிம் பெண்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இல்லை. இந்தியாவில் 3 தலாக் என சொல்லப்படும் சம்பவம் கிடையாது. இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி முஸ்லிம் இளைஞர்களை 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.