சிறுகனூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

சிறுகனூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-03 22:15 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வாலையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 39). லாரி டிரைவர். இவருடைய மனைவி மஞ்சுளா(25). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. தற்போது மஞ்சுளா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரஞ்சித் வேலைக்கு சென்று விட்டார். அவருடைய பெற்றோர் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனால் இரவில் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

நேற்று காலை இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 9 மாதங்களே ஆவதால், வரதட்சணை கொடுமையால் மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்