கடலூர், அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்,
சேலம் உருக்காலையை தனியாருக்கும் விற்கக்கூடாது, முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை திருத்தும் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் பலராமன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் குளோப், தொ.மு.ச. மாநில துணைத்தலைவர் ராசவன்னியன், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரா, சி.ஐ.டி.யூ. மாநிலக்குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.