பந்து என நினைத்து விளையாடியபோது வெடிபொருள் வெடித்து 2 மாணவர்களின் விரல்கள் சிதைந்தன; திருப்பத்தூர் அருகே பள்ளிக்கூட மாடியில் நடந்த விபரீதம்
வெடிபொருளை பந்து என நினைத்து விளையாடியபோது அது திடீரென வெடித்து சிதறியதால் 2 மாணவர்களின் விரல்கள் சிதைந்து துண்டாயின. திருப்பத்தூர் அருகே பள்ளிக்கூட மாடியில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்தவர் சரவணபாண்டி. இவரது மகன் மாதவன்(வயது13). கீழவேகுபட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் வெங்கடேசன். இவர்கள் 2 பேரும் பூலாங்குறிச்சி தியாகராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் நேற்று பள்ளி உணவு இடைவேளையின் போது பள்ளியின் அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றனர். அங்கு பந்து போன்று உருண்டை வடிவிலான பொருள் ஒன்று கீழே கிடந்தது. இதனால் அந்த மாணவர்கள் அந்த பொருளை எடுத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் யாருக்கும் தெரியாமல் பள்ளியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று அதை தூக்கிப்போட்டு விளையாடி உள்ளனர். அப்போது அந்த பொருளில் இருந்து வயர் வெளிவந்துள்ளது. இதை பார்த்த மாணவர்கள் வயரை பிடித்து இழுத்தனர். அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த சத்தத்தை கேட்டு பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் பதற்றத்துடன் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு 2 மாணவர்களின் கை விரல்கள் துண்டாகியும், சிதைந்தும் கையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையிலும் கீழே விழுந்து கிடந்தனர். அதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு உடனடியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பூலாங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கண்மாய் பகுதியில் மாணவர்கள் எடுத்து வந்து விளையாடிய பந்து போன்ற வெடிபொருளானது பாறை உடைக்க பயன்படுத்தும் வெடி மருந்து என தெரியவந்தது. அதை வெடி மருந்து என தெரியாமல் மாணவர்கள் எடுத்து விளையாடியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.