சாக்கிநாக்காவில் வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் பலி

சாக்கிநாக்காவில் வீட்டின் சுவர் இடிந்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-08-02 23:00 GMT
மும்பை, 

சாக்கிநாக்காவில் வீட்டின் சுவர் இடிந்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சுவர் இடிந்தது

மும்பையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நேற்று காலையும் நகரின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் மழையின் காரணமாக நேற்று அந்தேரி சாக்கிநாக்கா சாந்திவிலி பகுதியில் உள்ள குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு காட்கோபர் ராஜவாடி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஒருவர் பலி

இதில் படுகாயம் அடைந்த சந்திரகாந்த் முன்னப்பா ஷெட்டி (வயது 40) என்பவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சந்தீப்சுரேஷ் கதம் (வயது 35) என்பவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இடிபாடுகளை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். இதேபோல் நேற்று மதியம் பிரபாதேவி பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட 2 பெண்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

மேலும் செய்திகள்