பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பேட்டி
பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹாசன் ஆரோன் கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே கவுண்டம்பட்டியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற “விழுதுகளை நோக்கி” என்ற நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம் ராய் மணி, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹாசன்ஆரோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆபிரகாம் ராய் மணி கூறுகையில், “நாடு முழுவதும் கிராமங்களுக்கு சென்று இளைஞர்களை காங்கிரசில் சேர்ப்பதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்காக பாடுபட்ட கட்சி. மக்களின் நலனுக்காக ஆட்சியின் போது பல திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் நலனுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அதை தடுக்கும் வகையில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.” என்றார்.
பின்னர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹாசன் ஆரோன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிராமங்களுக்கு சென்று காங்கிரசாரின் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை இளைஞர் காங்கிரசில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது 48 ஆயிரம் இளைஞர்களை இணைத்துள்ளோம். தொடர்ந்து இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ராகுல் காந்தி காங்கிரஸ் பொறுப்பில் இருந்து விலகினாலும் அவர்தான் எங்களுக்கு தலைவர்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அந்த முடிவை அறிவித்துள்ளார். எனினும் நாங்கள் அவர் தலைமையில்தான் செயல்படுவோம்.
விருதுநகர் மாவட்டத்தில் 8 லட்சம் ஏழை-எளிய மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம் அதற்கான விதிமுறைகளை கூறவில்லை. பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டுள்ள தீப்பெட்டி தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பார்.
மத்திய அரசும் ஏழை-எளிய மக்களின் நலன் கருதி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் பா.ஜ.க. பண பலத்தாலும் மிரட்டலாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பணியவைத்து ஆட்சியை கவிழ்த்துள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடாது.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
இதனை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் ஆபிரகாம் ராய் மணி, மாநில தலைவர் ஹாசன் ஆரோன், பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
புதிய நிர்வாகிகளுக்கு நியமன அட்டைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவகாசி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன், ஒன்றிய தலைவர் குருமூர்த்தி, விருதுநகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராம்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் வெள்ளூர் உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.