நன்னிலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நன்னிலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சலிப்பேரி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி இந்திரா (வயது45). சம்பவத்தன்று இரவு இவர்கள் வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை கீழே சிதறி, நகை-பணம் உள்ளதா? என தேடிப்பார்த்துள்ளனர்.
ஆனால் பீரோவில் நகை, பணம் இல்லை என தெரிகிறது. இதையடுத்து அறையில் தூங்கி கொண்டிருந்த இந்திராவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து இந்திரா நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து இந்திராவிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.