திருச்செந்தூர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட். வகுப்பில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் படிக்கும் இந்த கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு குழுவின் ‘பி-பிளஸ்‘ சான்று பெற்ற நிறுவனம் ஆகும். 2007-ம் ஆண்டு முதல் முதுநிலை கல்வியியல் (எம்.எட்.) வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கல்லூரியில் இளங்கலை கல்வியியலில் ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிரறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், பிளான்ட் பயாலஜி, பயோ டெக்னாலஜி), பொருளறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளும், முதுநிலை கல்வியியலும் கற்றுத் தரப்படுகிறது.
பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல் உளவியியல், கல்வி நுட்பவியல், கணினி ஆய்வகங்கள், வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் வசதி செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு வளாக தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் தனித்திறமையை வளர்த்திட இசை மற்றும் நடன பயிற்சி, பல்வேறு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, யோகா மற்றும் உடற்கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
பி.எட். வகுப்பில் கணிதம், பொருளியல், உயிரறிவியல், பொருளறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளிலும் மற்றும் எம்.எட். வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பி.எட். மற்றும் எம்.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் உடனடியாக 04639-242181, 220577 என்ற தொலைபேசி எண்களிலும், 94863 81123 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்து உள்ளார்.