கைதான அனைத்து மாணவர்களையும் ஜாமீனில் எடுக்க வலியுறுத்தி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர்
கைதான அனைத்து மாணவர்களையும் ஜாமீனில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர்.
திருச்சி,
திருச்சி ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 28 மாணவர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மாணவர்களில் பலர் திருநெல்வேலி மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
படிக்க வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் சிக்கி தங்களது பிள்ளைகள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த அவர்களது பெற்றோர்கள் வேதனை அடைந்தனர். அவர்களை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். அவர்களில் 2 பேருக்கு நேற்று கோர்ட்டில் ஜாமீன் கிடைத்தது. பலருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
பெற்றோர் முற்றுகை
இந்நிலையில் நேற்று மாலை மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 100 பேர் ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரிக்குள் புகுந்தனர். கல்லூரி நிர்வாகம் எல்லா மாணவர்களையும் ஜாமீனில் எடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷம் போட்டு முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது மாணவர்களை ஜாமீனில் வெளியே எடுக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதுவரை மாணவர்களின் பெற்றோர் உள்ளேயே தங்கி கொள்ளலாம் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு மாணவர்களின் பெற்றோர் சமாதானம் அடைந்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை முதல் இரவு வரை கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த போது கல்லூரி வளாகத்திற்குள் செல்ல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை அனுமதிக்கவில்லை.