மூதாட்டியை தாக்கி ரூ.2½ லட்சம் நகைகள் கொள்ளை வேலைக்கார பெண்ணுக்கு வலைவீச்சு

மூதாட்டியை தாக்கி ரூ.2½ லட்சம் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிஓடிய வேலைக்கார பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-07-29 22:30 GMT
புனே, 

புனே அருகே ஜூன்னார் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வரும் மூதாட்டி நளினி கடே(வயது76). இவரது வீட்டில் 2 பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்த னர். சம்பவத்தன்று வீட்டை சுத்தம் செய்ய வந்த வேலைக்கார பெண் ஒருவர், திடீரென மூதாட்டியை சரமாரியாக தாக்கினார். மேலும் அவரது தலையை சுவரில் மோதச்செய்தார்.

பின்னர் அவரை காலால் எட்டி உதைத்தார். இதில் வலிதாங்க முடியாத மூதாட்டி சத்தம்போட்டார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வேலைக்கார பெண் கைக்குட்டையால் மூதாட்டியின் கைகளை கட்டினார். பின்னர் மூதாட்டி அணிந்திருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த தாக்குதலில் மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு சமையல் செய்ய வந்த மற்றொரு வேலைக்கார பெண் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் இதுகுறித்து மூதாட்டி ஜூன்னார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்துச்சென்ற வேலைக்கார பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்