தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்்்ப்பு தெரிவித்்து திருவாரூரில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-29 23:00 GMT
திருவாரூர்,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை புதிதாக அமைக்க வகை செய்யும் மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவால் மருத்துவ துறைக்கு பெரும் பாதிப்பு நேரிடும் என்று அனைத்து மருத்துவத்துறை மாணவர்களும், டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு முன்பு மருத்துவ மாணவர்கள் அமைப்பின் சாாபில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் செயலாளர் பிரமோத்குமார் தலைமை தாங்கினார். தேசிய மருத்துவ ஆணைய மசோதா மூலம் மருத்துவ கவுன்சிலின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுவதுடன், மருத்துவ சேவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கோஷங்கள்

மேலும் எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதி தேர்வு நெக்ஸ்ட் (நேஷனல் எக்சிட் டெஸ்ட்) என்ற பெயரில் பொது தேர்வாக நடத்தவும் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே தேசிய மருத்துவ ஆணையத்தையும், நெக்ஸ்ட் தேர்வினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்