எண்ணூரில் விலையில்லா மடிக்கணினி கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்கள்
எண்ணூர் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், விலை யில்லா மடிக்கணினி கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
எண்ணூர் கத்திவாக்கம் மேல்நிலைப்பள்ளியில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
இதை அறிந்த 2017-ம் ஆண்டு இப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களுக்கும் மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், முன்னாள் மாணவர்களாகிய தங்களுக்கு விரைவில் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும். 2 ஆண்டுகளாக தராமல் ஏமாற்றுவதாக கூறிகோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆசிரியர்கள், மடிக்கணினி ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கான மடிக்கணினி பள்ளிக்கு வந்தால் வழங்கப்படும் என்று கூறினார்கள்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மாணவ- மாணவிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 40-க்கும் மேற்பட்டோர் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த மயிலாப்பூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளிக்குள் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளியின் முதல்வர், அனைவருக்கும் மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.