தமிழகத்தில் சுற்றுலா அதிகாரி வேலை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி. எஸ்.சி.) உதவி சுற்றுலா அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 42 பேர்தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2019-07-29 10:31 GMT
டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது முதல் 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக 100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணத்தில் விதி விலக்கு அனுமதிக்கப்படுகிறது. இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் ஆகஸ்டு 20-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 29-ந்தேதி நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்