சவுக்கு மரத்தை ஊடுபயிராக சாகுபடி செய்தால், சூறாவளி காற்றில் இருந்து வாழைகளை பாதுகாக்க முடியும் - விஞ்ஞானி புவனேஸ்வரன் தகவல்

சவுக்கு மரத்தை ஊடுபயிராக சாகுபடி செய்தால்சூறாவளி காற்றில் இருந்து வாழைகளை பாதுகாக்கலாம் என்று விஞ்ஞானி புவனேஸ்வரன் கூறினார்.

Update: 2019-07-28 22:30 GMT
காரமடை,

கோவை மாவட்டம் காரமடையில் உள்ள இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வனஆராய்ச்சி கல்வி கழகம்மற்றும் வன மரபியல்மரப்பெருக்குநிறுவனம் சார்பில்வாழை பாதுகாப்புக்கு சவுக்குஅடிப்படையிலானகாற்று தடுப்பான்வேளாண் காடு வளர்ப்பு குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.இதற்கு காரமடைவேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானிகுமாரவடிவேல்தலைமை தாங்கினார். வேளாண் காடுகள் மற்றும் வனமேலாண்மை துறை தலைவர்செந்தில்குமார்,அவினாசிலிங்கம்கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் கவுரிராமகிரு‌‌ஷ்ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வனவிரிவாக்கத்துறைதலைவர் ராஜகோபாலன்வரவேற்றார்.

இதில்வனமரபியல்மற்றும்மரப்பெருக்குநிர்வாக இயக்குனர்மோஹித் கெராகலந்துகொண்டுகாற்றுத்தடுப்பு ரக செடிகளைவிவசாயிகளுக்கு வழங்கி,காற்றுத் தடுப்புமரங்கள் பற்றிய கையேட்டையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில்காற்று தடுப்புமரவகைவிஞ்ஞானி புவனேஸ்வரன்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சூறைக்காற்றால்வாழை தோட்டங்களில்பெருத்த சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக நமது நாட்டில்சூறாவளி காற்றின்மூலம் விவசாயிகளுக்குபல கோடிரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளின் பொருளாதாரமும்கடுமையாக பாதிக்கப்படுகிறது.இந்த சூழலில்காற்றினால் ஏற்படும் சேதாரத்தை ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் மூலம் எதிர்கொள்ளவும்,இடர்பாடுகளைசமாளிக்கவும்வனமரபியல்மற்றும்மரப்பெருக்குநிறுவனம்ஆராய்ச்சி திட்டம்மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 வீரிய ரகஜிங்குனியானாசவுக்கு மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஊடுபயிராகசாகுபடி செய்வதின் மூலம் புயல் மற்றும்சூறாவளி காற்றில்இருந்து வாழை உள்ளிட்டபயிர்களை பாதுகாக்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் காரமடை,சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவாழை சாகுபடிசெய்து வரும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் அறிவியல் நிலையவிஞ்ஞானி சகாதேவன்நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்