கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமணவிழாவையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமணவிழாவையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர்,
கரூரிலுள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு சார்பில் ஆடி மாதம் தெய்வதிருமணவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தெய்வதிருமண விழாவையொட்டி கோவில் முன்பு பந்தல்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் முளைப்பாரி வைக்கப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டு வருகிறது. வருகிற (ஆகஸ்டு) 3-ந்தேதி கணபதி வழிபாடு நடத்தி கோவில் ராஜகோபுரத்திற்கு பிரமாண்ட மாலை சாத்தப் படுகிறது.
பின்னர் மாலை 4 மணியளவில் பசுபதீஸ்வரர் கோவிலிலிருந்து பெண் வீட்டு சீர் அழைக்க பக்தர்கள் ஒன்று கூடுகின்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுதெரு அபய பிரதான ரெங்கநாதசாமி கோவிலுக்கு சென்று மாப்பிள்ளை வீடான பசுபதீஸ்வரர் கோவிலுக்கு வந்தடைகின்றனர். அதனை தொடர்ந்து இரவில் மாப்பிள்ளை பெண் வீடு புகுதல், சீர்தட்டு அழைத்தல், சிறப்பு உபசரிப்புகள் நடக்கின்றன. இதைத்தொடர்ந்து 4-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் கல்யாண பசுபதீஸ்வரர் சாமிக்கும், ஆனிலை அலங்காரவள்ளி- சவுந்தரநாயகிக்கும் தெய்வ திருமணம் நடக்கிறது.
சமர்ப்பணம்
பின்னர் பக்தர்கள் மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப் படுத்தி மொய் பணத்தை சமர்ப்பணம் செய்கின்றனர். அதனை தொடர்ந்து பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்கின்றன. திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு வேண்டுபவர்கள் உள்ளிட்டோர் இந்த தெய்வ திருமணவிழாவில் பங்கேற்றால் சுபகாரியம் நிகழும். பிரிந்த தம்பதியர் சேரவும், 16 பேறுகளை பெறவும் பசுபதீஸ்வரர் அருள்பாலிப்பார் என்பது ஜதீகம். எனவே இந்த திருமண நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.