ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
மங்களமேடு,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் வேப்பூர் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சியிலும் உள்ள பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, நல்லுசாமி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி, வேப்பூர் வட்டாரக்கல்வி அலுவலர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய 54 குழந்தைகளும், உடல் இயக்க குறைபாடுடைய 49 குழந்தைகளும், செவித்திறன் குறைபாடுடைய 27 குழந்தைகளும், பார்வைக் குறைபாடுடைய 36 குழந்தைகளும் என ஆக மொத்தம் 166 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்
இந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை மனநல மருத்துவர் மின்னத்துல்முபிதா, எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் செந்தில்குமார், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பூசனா, கண் மருத்துவர் ராஜேஸ்வரி மருத்துவர்கள் ரஞ்சன், சத்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, முட நீக்கியல் வல்லுனர் ஜெயராமன், செவி பரிசோதகர் செந்தில்முருகன், கண் பரிசோதகர் ராஜலிங்கம் ஆகியோர் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பரிசோதித்து உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். இதில் சக்கர நாற்காலி 5 குழந்தைகளுக்கும், நடைப்பயிற்சி சாதனம் 7 குழந்தைகளுக்கும், முடநீக்கியல் சாதனம் 17 குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குறையுடையோருக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் 4 குழந்தைகளுக்கும், பார்வையுடையோருக்கான கற்றல் கற்பித்தல் உபகரணப்பெட்டி 2 குழந்தைகளுக்கும், கண் கண்ணாடி 8 குழந்தைகளுக்கும், சிறப்பு சக்கர நாற்காலி 6 குழந்தைகளுக்கும், செவித்துணைக் கருவி 7 குழந்தைகளுக்கும், ஆக மொத்தம் 56 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களுக்கு வழங்க தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். முகாமில் கலந்துகொண்ட குழந்தைகளில் 14 குழந்தைகளுக்கு புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வேப்பூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.