தளி அருகே சேதம் அடைந்த காண்டூர் கால்வாய் கரைகள் சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
தளி அருகே சேதம் அடைந்த காண்டூர் கால்வாயின் கரைகள் சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தளி,
பி.ஏ.பி. பாசன திட்டத்தின் உயிர் நாடியாக திருமூர்த்தி அணை விளங்கி வருகிறது. அணைக்கு மேற்குதொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் பாலாறு, உழுவி ஆறு, கொட்டைஆறு, பாரப்பட்டி ஆறு, குருமலை ஆறு, வண்டிஆறு, உப்புமண்ணம்ஓடை, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள். ஓடைகள் நீராதாரமாக உள்ளன. அது தவிர அப்பர்நீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர்ஆழியார் உள்ளிட்ட தொகுப்பு அணைகள் காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு உதவி புரிந்து வருகின்றன.
மழைக்காலங்களில் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் முதலில் சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தை வந்தடைகிறது. அங்கு மின்உற்பத்தி பணிகள் நிறைவடைந்த பின்னர் காண்டூர் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் 49.300 கிலோ மீட்டர் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. ஆண்டுதோறும் ஜூலை 15 முதல் அடுத்த ஆண்டு மே 15 வரையிலும் பத்து மாதங்கள் தண்ணீர் வரத்து இருக்கும் வகையிலும் 1150 கனஅடி தண்ணீரை சுமந்து செல்லும் வகையிலும் காண்டூர் கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாய் உதவியால் பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இவற்றில் அம்மாபட்டிகுளம், செங்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட ஏழுகுளங்கள் பாசனமும் அடங்கும். அதுதவிர உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், கொமரலிங்கம், குடிமங்கலம் மற்றும் பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருவதற்கு காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் நல்லாறு மற்றும் வரப்பள்ளம் பகுதிகளில் கால்வாயின் கரைகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் அதிகப்படியான தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம் கூறியதாவது:-
பி.ஏ.பி. திட்டத்தின் உயிர்நாடியான காண்டூர் கால்வாயில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக சேதமடைந்த கரைகளை அகற்றிவிட்டு உலகவங்கி நிதியுதவியுடன் கான்கிரீட் கரைகள் கட்டுமான பணிகள் நடைபெற்றது. ரூ.202 கோடி மதிப்பீட்டில் 39 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக கால்வாயின் பக்கவாட்டு சுவர்கள் புதிதாக கட்டப்பட்டது. மீதமுள்ள 10.3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.40 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதியில் நின்று விட்டது.
இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக விவசாயிகள் கோரிக்கை வைத்ததின் பேரில் கால்வாயை புதுப்பிப்பதற்காக ரூ.70 கோடியில் மதிப்பீடு தயார் செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று வரையும் நிதியும் வரவில்லை கால்வாயில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக நல்லாறு மற்றும் வரப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் கால்வாயில் திறக்கப்படுகின்ற தண்ணீர் முழுமையாக திருமூர்த்தி அணையை வந்தடையாமல் வீணாகி விடுகிறது.
மேலும் கால்வாய் சேதமடைந்த பகுதியில் ஒருசிலர் தண்ணீரை திருடி வருகின்றனர். அதை தடுப்பதற்கு வனத்துறை போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறையினர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவினர் ரோந்து செல்லும் போது தங்குவதற்கு ஆங்காங்கே குடில்களை ஏற்பாடு செய்து தரவேண்டும். இதனால் அவர்கள் ஓய்வெடுத்துக்கொள்வதுடன் தண்ணீர் திருட்டை தடுப்பதிலும் முழுமையாக ஈடுபட முடியும்.
அது மட்டுமின்றி கால்வாயில் நீர்வரத்து இல்லாத போது அதில் உள்ள சுரங்க பாதைகளில் ஏதேனும் விரிசல் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். அத்துடன் தற்போது காண்டூர் கால்வாயில் நீர்வரத்து இல்லாத சூழலை பயன்படுத்தி அதில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முன்வரவேண்டும். இதன் காரணமாக சர்க்கார்பதியில் திறக்கப்படுகின்ற தண்ணீர் வீணாகாமல் முழுமையாக திருமூர்த்தி அணையை வந்தடையும். இதனால் பாசனத்திற்கும் குடிநீருக்கும் தங்குதடையின்றி சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்ய இயலும். இல்லையென்றால் பாசனநிலங்கள் பாலைவனமாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிடும். பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி நேரிடும்.
எனவே காண்டூர் கால்வாயின் சேதமடைந்த பகுதியில் அதிகாரிகள் காலம் தாழ்த்தாது சீரமைப்பு பணிகளை தொடங்குவதற்கு முன்வரவேண்டும் என்பது பி.ஏ.பி. விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.