மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் இதுவரை 2½ லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளி கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் சேலம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் ஏராளமான மாணவ- மாணவிகள் பயன்பெற்று உள்ளனர்.
சிறந்த பாடத்திட்டங்களையும், பொது அறிவு புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்து பயன்பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.324 கோடியே 14 லட்சம் மதிப்பில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 318 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் ரூ.58 கோடியே 80 லட்சம் மதிப்பில் 48 ஆயிரத்து 70 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.