குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் பேட்டி
குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை, மனித உரிமைகள் பிரிவு, கோட்டார் போலீஸ் நிலையத்தின் மாடியில் அமைந்துள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு, கணேசபுரம் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஒவ்வொரு பிரிவிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள், வசதிகள், குற்ற பதிவேடுகள், போலீசார் பயன்படுத்தும் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள விபத்து வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன சோதனைகள் மேற்கொள்ள வேண்டும், ஹெல்மெட் அணிவதையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றார். மேலும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு வளாகத்தில் மரக்கன்றுகளையும் அவர் நட்டார்.
அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், உதவி சூப்பிரண்டு ஜவகர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வடமாநில தொழிலாளர்கள் கண்காணிப்பு
பின்னர் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸ் பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வழக்கமானது தான். தமிழகத்தின் தென்மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்குத்தான் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருகிறார்கள். இவர்களில் குற்றவாளிகளும் தொழிலாளர்கள் போர்வையில் வந்து விடுகிறார்கள். வடமாநில தொழிலாளர்களை கண்காணிப்பது பற்றி போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் எங்கு வேலை பார்க்கிறார்கள்? எங்கு தங்கி உள்ளனர்? அவர்களுடன் யார், யார் இருக்கிறார்கள்? என்ற விவரங்கள் திரட்டப்படுகிறது. இவற்றின் மூலம் வடமாநில தொழிலாளர்கள் அனைவரையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் நடந்த முன்னாள் மேயர் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் கமிஷனர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.