அதிகார பிரச்சினைக்கு மாநில அந்தஸ்து பெறுவதே தீர்வு - நாராயணசாமி பேச்சு
புதுவை மாநிலத்தின் அதிகார பிரச்சினைக்கு மாநில அந்தஸ்து பெறுவதே தீர்வாகும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில அரசின் அதிகாரங்களை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாக கூறி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, அமைச்சரவை முடிவு அடிப்படையில் தான் செயல்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, மத்திய அரசின் சார்பிலும், கிரண்பெடி சார்பிலும் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவர்னர் கிரண்பெடியின் மனுவை தள்ளுபடி செய்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட உதவிய ப.சிதம்பரம் எம்.பி., கபில்சிபில் எம்.பி., சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் காந்திராஜ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.
விழாவுக்கு முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், ‘மாநிலத்தின் உரிமையை நாம் போராடி பெற்றுள்ளோம். இந்த அதிகார பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில அந்தஸ்து பெறுவதே தீர்வாகும். எனவே மாநில அந்தஸ்து தொடர்பாக மத்திய அரசுக்கு அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்றார்.
விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் சமாதான ஒருமைப்பாட்டு கழக செயலாளர் கீதநாதன் நன்றி கூறினார்.