ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நீடாமங்கலத்தில் நடந்தது.

Update: 2019-07-27 22:15 GMT
நீடாமங்கலம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி பல்வேறு தரப்பினரும் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23-ந் தேதி தஞ்சை, திருவாரூர், நாகையில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நீடாமங்கலத்தில் நடந்தது.

நிர்வாகிகள்

போராட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் செந்தில்வேலன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன், போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்