பணிநீக்கம் செய்யப்பட்ட வனத்துறை ஊழியருக்கு இழப்பீடு வழங்காததால் ஜீப்பை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு
பணிநீக்கம் செய்யப்பட்ட வனத்துறை ஊழியருக்கு இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரம் வனத்துறை அலுவலக ஜீப்பை ஜப்தி செய்ய தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ராமநாதபுரம்,
பணிநீக்கம் செய்யப்பட்ட வனத்துறை ஊழியருக்கு இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரம் வனத்துறை அலுவலக ஜீப்பை ஜப்தி செய்ய தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்குள் ஜீப் டிரைவர் வாகனத்தை எடுத்து சென்று விட்டதால் கோர்ட்டு உத்தரவினை நிறைவேற்றவிடாமல் தடை ஏற்படுத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள சேமனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் துரைராஜ்(வயது 65). இவர் கடந்த 1985-ம் ஆண்டு ராமநாதபுரம் கோட்ட வன அலுவலகத்தில் தற்காலிக கிராம சமூக வன ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துரைராஜ் உள்பட மாநிலம் முழுவதும் கிராம சமூக வன ஊழியர்களை திடீரென பணியில் இருந்து நீக்கிவிட்டார்களாம். இதனை எதிர்த்து துரைராஜ் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே மாநிலம் முழுவதும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்குள் துரைராஜ் ஓய்வு பெறும் வயதினை அடைந்துவிட்டதால் பணியில் சேரமுடியவில்லை. இந்த நிலையில் துரைராஜ் தொடர்ந்த வழக்கில் வேலை நீக்கம் செய்ததற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடும், வேலைநீக்கம் செய்யப்பட்டது முதல் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய காலம் வரை பாதி சம்பளமும் வழங்க மதுரை தொழிலாளர் கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவினை நிறைவேற்றாததால் துரைராஜ் சார்பில்இழப்பீட்டு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 44-ஐ வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீண்டும் மதுரை கோர்ட்டில் நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன் இழப்பீடு வழங்காத வனத்துறை அலுவலகத்தின் ஜீப்பை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி ராமநாதபுரம் கோர்ட்டு கட்டளை பணியாளர் அறியவன், மனுதாரர் துரைராஜ் ஆகியோர் கேணிக்கரை போலீசார் உதவியுடன் ராமநாதபுரம் கோட்ட வன அலுவலகத்தில் உள்ள ஜீப்பை ஜப்தி செய்ய சென்றனர். வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று ஜீப்பை ஜப்தி செய்ய வந்தபோது அதற்குள் ஜீப் டிரைவர் வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாராம்.
இதனால் ஜீப்பை ஜப்தி செய்து கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற முடியாமல் திரும்பிய ஊழியர்கள், இதுகுறித்து ராமநாதபுரத்தில் தொழிலாளர் கோர்ட்டில் நீதிபதி சந்திரசேகரனிடம் தகவல் தெரிவித்தனர். கோர்ட்டு உத்தரவினை நிறைவேற்றவிடாமல் உத்தரவினை அவமதித்த சம்பந்தப்பட்ட வனத்துறை ஜீப் டிரைவர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.