கன்னங்குறிச்சியில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி துப்புரவு பெண் ஊழியர் பலி

கன்னங்குறிச்சியில் மின்சாரம் தாக்கி மாநகராட்சி துப்புரவு பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-07-26 22:00 GMT
கன்னங்குறிச்சி, 

சேலம் கன்னங்குறிச்சி எல்.பி. செட்டித்தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி மணி(வயது 56). இவர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை மணி வீட்டில் இருந்த மின் மோட்டாரை போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்