ராதாபுரம் அருகே உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் aமுற்றுகை

ராதாபுரம் அருகே உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-07-26 22:45 GMT
ராதாபுரம்,

ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் ஏராள மானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக, தனியார் நிறுவனத்துக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று கோட்டைகருங்குளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இளநிலை மின்வாரிய செயற்பொறியாளர் மகேஷ்வரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், உயர்அழுத்த மின்கோபுரம் ஊருக்குள் வராமல் மாற்றுப்பாதையில் அமைப்போம் என்றும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்