காதலி பேசாததால் விரக்தி: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலி பேசாததால் விரக்தியில் இருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-07-25 22:00 GMT
சென்னை,

சென்னை கோடம்பாக்கம் அஜித் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் மோகன் ராஜ் (வயது 24). இவர் அதே பகுதியில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

மோகன் ராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த கோடம்பாக்கம் போலீசார் மோகன் ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மோகன் ராஜூம் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாரின் கவனத்துக்கு சென்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த இளம்பெண்ணும் சில நாட்களாக மோகன் ராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் கடந்த சில நாட்களாக மோகன் ராஜ் மிகுந்த மன வேதனையில் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன் ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்