பைப்லைன் பராமரிப்பு பணி: மேற்கு புறநகர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து

பைப்லைன் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேற்கு புறநகர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

Update: 2019-07-23 22:14 GMT
மும்பை,

மும்பை மேற்கு புறநகர் பகுதிகளான மலாடு, கோரேகாவ், காந்திவிலி, போரிவிலி மேற்கு போன்ற இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பைப்லைனில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மேல் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரையிலும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்